ஜோதிடம்

ஃபோர்ட் வொர்த்: அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் நகரில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நான்சி ரிச்சி பிரிவில் உள்ள வீராங்கனைகள் மோதினர். முதலில் ஆன்ஸ் ஜெபவூர்(துனிசியா, 2வது ரேங்க்), ஜெசிகா பெகுலா(அமெரிக்கா, 3வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். முதல் செட்டை பெகுலா அதிரடியாக விளையாடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். ஆனால் அடுத்த 2 செட்களை ஆன்ஸ் போராடி 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்தடுத்து கைப்பற்றினார்.அதனால் ஒரு மணி 38நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் வென்ற ஆன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இவர் முதல் ஆட்டத்தில் சபலென்காவிடம் தோல்வியை சந்தித்தார். தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோற்றுள்ள பெகுலா தனது கடைசி லீக் ஆட்டத்தில் சபலென்காவை எதிர்கொள்கிறார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் மரியா சாக்கரி(கிரீஸ், 5வது ரேங்க்) அரினா சபலென்கா(பெலாரஸ், 7வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் சாக்கரி ஒரு மணி 37 நிமிடங்களில் 6-2, 6-4 என நேர் செட்களில் சபலென்காவை வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ந்து 2வதுவெற்றியை பதிவு செய்துள்ள சாக்கரி தனது கடைசி லீக் ஆட்டத்தில் உடன் ஆன்ஸ் ஜெபவூருடன் மோத உள்ளார்.



from Dinakaran.com |04 Nov 2022 https://ift.tt/J2yVng1
via IFTTT

Post a Comment

0 Comments