ஜோதிடம்

சட்டோகிராம்: இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சட்டோகிராம் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்புடன், இந்தியா இந்த தொடரில் களமிறங்குகிறது. புள்ளிப் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் 2 டெஸ்ட் மற்றும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள 4 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு (ஜூன் 2023) எந்தவித தடங்களும் இல்லாமல் முன்னேறலாம். காயம் காரணமாக ரோகித், ஜடேஜா, ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெறாத நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் இந்தியா விளையாட உள்ளது. பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு கூட்டணியை இறுதி செய்வது இந்திய அணி நிர்வாகத்துக்கு சற்று தலைவலியை கொடுத்துள்ளது. உமேஷ், உனத்கட், சிராஜ் வேகத்துடன் அஷ்வின், அக்சர் சுழல் என பந்துவீச்சு வியூகம் அமையலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து 2 வேகம் போதும் என முடிவெடுத்தால், கூடுதல் ஸ்பின்னராக சவுரவ் குமார் அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய 2 டெஸ்டில் (4 நாள் போட்டி) சவுரவ் குமார் 15 விக்கெட் அள்ளி அசத்தியிருந்தார். இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் நிலையில், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், சவுரவ் குமார், கொனா பாரத், குல்தீப் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன். வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), மோமினுல் ஹக், மெகிதி ஹசன் மிராஸ், மமகதுல் ஹசன் ஜாய், அனாமுல் ஹக் பிஜோய், காலித் அகமது, எபாதத் உசேன், ஷோரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம், நஜ்முல் உசேன் ஷான்டோ, ரெஜால் ரகுமான் ராஜா, ஜாகிர் ஹசன் (விக்கெட் கீப்பர்), நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), யாசிர் அலி.



from Dinakaran.com |14 Dec 2022 https://ift.tt/xEVkibX
via IFTTT

Post a Comment

0 Comments