டி20 போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் (24 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் முடிந்ததும், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகமது நபி அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய கேப்டனாக ரஷித் கான் பொறுப்பேற்கிறார். 2019 செப்டம்பர் - நவம்பர் வரை 3 மாதங்களுக்கு இவர் ஏற்கனவே ஆப்கான் அணியின் கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கான் அணி 2023 பிப்ரவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள டி20 தொடரில் இருந்து ( 3 டி20), ரஷித் கானின் புதிய சவால் தொடங்கும்.
from Dinakaran.com |30 Dec 2022 https://ift.tt/xvlXtZq
via IFTTT
0 Comments