மும்பை: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி இன்று மும்பையிலும், 2வது போட்டி நாளை மறுதினம் புனேவிலும், கடைசி போட்டி ஜன.7ல் ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒருநாள் ஆட்டங்கள் ஜன.10, 12, 15 தேதிகளில் முறையே கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளன.டி20 தொடரில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மீண்டும் களம் காண்கிறது. ஏற்கனவே நவம்பரில் நியூசிலாந்து சென்று விளையாடிய டி20 தொடரை, ஹர்திக் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனால் இந்திய அணி இன்று கூடுதல் நம்பிக்கையுடன் இலங்கையை எதிர்கொள்கிறது.அதே சமயம் டி20 கோப்பை ஆசிய சாம்பியனான இலங்கை அணி அதே தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியில் துணை கேப்டன் சூரியகுமார், ஷிகர், கில், இஷான், ருதுராஜ், சஞ்சு என வலுவான பேட்டிங் வரிசையுடன் வாஷிங்டன், ஹர்திக், அக்சர் என ஆல் ரவுண்டர்களும், சிறந்த பந்து வீச்சாளர்களும் சொந்த மண்ணில் இலங்கையை எதிர்கொள்வது கூடுதல் பலம்.இலங்கை அணியிலும் தசுன் சனுகா, தனஞ்ஜெய டி சில்வா, ஹசரங்கா கருணரத்ன, ராஜபக்ச, குசால் மெண்டிஸ், மதுஷங்கா என திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூரியகுமார் யாதவ் (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங், யஜ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெயிக்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், முகேஷ் குமார், ஹர்ஷல் படேல், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஷிவம் மாவி, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர்.இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா (துணை கேப்டன்), சரித் அசலங்கா, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமிகா கருணரத்னே, லாகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷான், பானுகா ராஜபக்ச, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷனா, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே.
from Dinakaran.com |03 Jan 2023 https://ift.tt/D9UZMo4
via IFTTT
0 Comments