ஜோதிடம்

மும்பை: ரஞ்சி கோப்பையில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதிய எலைட் பி பிரிவு லீக் ஆட்டம், எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச... தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 337 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய தமிழ்நாடு அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 380 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் 27, அபராஜித் 22, சுதர்சன் 68, இந்திரஜித் 103 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் 107 ரன், விஜய் ஷங்கர் 43 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 221 ரன் சேர்த்து அசத்தினர். பிரதோஷ் 169 ரன் (308 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), விஜய் ஷங்கர் 103 ரன் (174 பந்து, 13 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். சாய் கிஷோர் 19 ரன் எடுக்க, அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ் இருவரும் டக் அவுட்டாகினர். திரிலோக் நாக் 4 ரன் எடுத்து வெளியேற, தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சில் 548 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷாருக் கான் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, 24.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரித்வி 15, அர்மான் ஜாபர் 29, கேப்டன் ரகானே 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 66 ரன், சர்பராஸ் கான் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர் 2, விக்னேஷ் 1 விக்கெட் எடுத்தனர். சர்பராஸ் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. தமிழ்நாடு 1 புள்ளியுடன் திருப்தி அடைந்தது.



from Dinakaran.com |07 Jan 2023 https://ift.tt/rkdR3e9
via IFTTT

Post a Comment

0 Comments