ஜோதிடம்

ரூர்கேலா: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், துடிப்புடன் விளையாடி சிலி கோல் பகுதியை முற்றுகையிட்ட நியூசிலாந்து அணி 9வது நிமிடத்தில் லேன் சாம் பந்தை அபாரமாக கடத்திச் சென்று பீல்டு கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 11வது நிமிடம் மற்றும் 18வது நிமிடத்தில் ஹிஹா சாம் அபாரமாக பீல்டு கோல் அடிக்க, அந்த அணி 3-0 என முன்னிலையை அதிகரித்தது. மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தில் கோல் ஏதும் விழவில்லை. 4வது குவார்ட்டரில் கடும் நெருக்கடி கொடுத்த சிலி அணிக்கு கான்டார்டோ இக்னேசியோ 49வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.



from Dinakaran.com |15 Jan 2023 https://ift.tt/74BcMqH
via IFTTT

Post a Comment

0 Comments