ஜோதிடம்

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னருடன் (21 வயது, 12வது ரேங்க்) மோதிய மெட்வதேவ் (27 வயது, 8வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடி சின்னரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த மெட்வதேவ் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை தட்டிச் சென்றார்.



from Dinakaran.com |21 Feb 2023 https://ift.tt/uOtaT3S
via IFTTT

Post a Comment

0 Comments