ஜோதிடம்

*மத்திய பிரதேசம் - இதர இந்தியா மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் குவாலியர், கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.* காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்குவதும் சந்தேகமே என தகவல் வெளியாகி உள்ளது.* தாய்லாந்தில் நடந்த மகளிர் ஸ்னூக்கர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் அனுபமா ராமசந்திரன் (தமிழ்நாடு) - அமி காமினி (மத்திய பிரதேசம்) இணை, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து இணையை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன்பு ருமேனியாவில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் அனுபமா வெள்ளி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.* மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் தத்ரூபமான ஆளுயர சிலை வைக்கப்பட உள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.* தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் செஞ்சுரியன், சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் ஜோடி 35.2 ஓவரில் 141 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. எல்கர் 71 ரன், மார்க்ரம் 115 ரன் விளாசி ஆட்டமிழந்தனர்.* தொடர்ந்து 378 வாரங்களாக தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ள செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் சாதனையை (377 வாரம்) முறியடித்துள்ளார்.



from Dinakaran.com |01 Mar 2023 https://ift.tt/psERFSQ
via IFTTT

Post a Comment

0 Comments