புதுடெல்லி: வீரர்கள் குறித்து அவதூறு தகவல்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் சேத்தன் ஷர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் டிவி நிருபருடனான உரையாடலில், இந்திய அணி நட்சத்திரங்கள் ரோகித் - கோஹ்லி, முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான கங்குலி - கோஹ்லி இடையேயான ஈகோ மோதல், உடல்தகுதியை நிரூபிப்பதற்காக வீரர்கள் ஊக்கமருந்து உட்கொள்வது போன்ற தகவல்களை சேத்தன் ஷர்மா பகிர்ந்துகொள்ளும் வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தேர்வுக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவுக்கு சேத்தன் நேற்று கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தேர்வுக் குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட உள்ளதாகவும் கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
from Dinakaran.com |18 Feb 2023 https://ift.tt/qu7LKip
via IFTTT
0 Comments