https://ift.tt/PQSN2Fq

மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: சுற்றுலா தலங்கள் மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பரவி வருவது வீரியமற்ற வைரஸ், பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இந்திய அளவில் 11 ஆயிரம் எண்ணிக்கை வந்தாலும் தமிழ்நாட்டில் 500 வரை சென்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. போலி மருத்துவர்கள் தற்போது முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இது நீண்ட காலமாக இருந்தாலும், இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரே நாளில் 73 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8AC0UHX

Post a Comment

0 Comments