
சென்னை: "உயர் சாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல.ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியாகுமே தவிர, சமூக நீதியாகாது" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக பேசியது: "சமூக நீதியைக் காக்கும் கடமை, நமக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் இந்த மாநாட்டில் இணைந்துள்ளோம். சமூக நீதியை அடையவேண்டும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒரு சில மாநிலங்களின் பிரச்சினையும் அல்ல. இது, இந்திய சமூக அமைப்புமுறைச் சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சினை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GzILi9f
0 Comments