
சென்னை: சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியை முதல்முறையாக கேப்டனாக வழிநடத்தி இருந்தார் தோனி. அடுத்தடுத்த நாட்களில் பல கோப்பைகளை குவிக்க உள்ள மகத்தான கேப்டன் திறன் கொண்ட ஒருவரின் சகாப்தத்தின் தொடக்கம் அது என அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். கேப்டனாக முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டார். அந்தப் போட்டியில் பவுல்-அவுட் முறையில் இந்தியா வாகை சூடி இருக்கும். பின்னர் அந்த தொடரில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (அரையிறுதி), பாகிஸ்தான் (இறுதிப் போட்டி) வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் பவுல்-அவுட்டில் சுழற்பந்து வீச்சாளர்களை தோனி பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments