ODI WC 2023 | நெதர்லாந்தை 99 ரன்களில் வீழ்த்தி நியூஸிலாந்து 2-வது வெற்றி!

ஹைதராபாத்: நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் நெதர்லாந்து அணி மோதியது. ஹைதராபாத் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய கான்வே - வில் யங் நியூஸிலாந்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசி நெதர்லாந்து பவுலர்கள் ஷாக் கொடுத்து ஆட்டத்தை தொடங்கினர். கான்வே - வில் யங் கூட்டணி முதலில் தடுமாறினாலும் பின்னர் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேகரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments