
ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார்.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது இலங்கை. குசால் மெண்டிஸ், 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். சதீரா சமரவிக்ரமா, 99 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா, 51 ரன்கள் எடுத்தார். 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments