ODI WC 2023 | ஆப்கனுக்கு முதல் வெற்றி; இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி!

புதுடெல்லி: நடப்பு உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்தார். இப்ராஹிம் ஸத்ரான் 28 ரன்கள், ரஷித் கான் 23 ரன்கள், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்கள் எடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments