ODI WC 2023 | பவுலர்களாக ஜொலித்த ரோகித், கோலி - நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா 9வது வெற்றி

பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

411 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. சிராஜ் ஓவரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெஸ்லி பாரேசி கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதன்பின் கொலின் அக்கர்மன் - மேக்ஸ்வெல் ஓ தாவுத் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 66 ரன்கள் இருந்தபோது இந்தக் கூட்டணியை பிரித்தார் குல்தீப் யாதவ். கொலின் அக்கர்மன் 35 ரன்களில் 2-வது விக்கெட்டாக அவுட் ஆனார். சில நிமிடங்களில்
ஜடேஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் விக்கெட்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments