
மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களத்தில் போராடி வெற்றியை வசமாக்கி உள்ளது. குறிப்பாக அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தனி ஒருவராக களத்தில் நின்று ‘பிக் ஷோ’ காட்டி இருந்தார்.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான், 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். ரஷித் கான் 35 ரன்கள் எடுத்திருந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், ஹஷ்மதுல்லா ஷாய்தி 26 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments