மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள் - மும்பைக்கு எதிராக கொல்கத்தா 157 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல்

கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதை அடுத்து 16 ஓவர்களாக மேட்ச் குறைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே, ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம், 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என்ற விதிமுறைகளுடன் போட்டி தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments