தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில்நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மெய்ராபா லுவாங் மைஸ்னம், டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெய்ராபா லுவாங் மைஸ்னம் 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிசுற்றில் தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 22 வய தானமெய்ராபா லுவாங் மைஸ்னம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments