
சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் இந்திய அணி வென்றது. இதைத் தொடர்ந்துஇரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments