“இந்த கோப்பை ஒட்டுமொத்த நாட்டுக்குமானது” - ரசிகர் வெள்ளத்தின் நடுவே ரோஹித் நெகிழ்ச்சி!

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை ஒட்டுமொத்த நாட்டுக்குமானது என்று மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர் வெள்ளத்தின் நடுவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments