
அலிபாக்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த வீடு குறித்தும் அவர் சிலாகித்து பேசியுள்ளார். இது வைரலாகி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். கோப்பை வென்று கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்திய அணிக்கான பாராட்டு விழா முடிந்ததும் வெளிநாடு சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments