
ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் ஹீட்ஸில் அமோஜ் ஜேக்கப், ராஜேஷ் ரமேஷ், முகமது அஜ்மல், முகமது அனாஸ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பங்கேற்றது. ஹீட்ஸ் 2-ல் இடம் பெற்ற இந்திய அணி பந்தய தூரத்தை 3:00.58 விநாடிகளில் கடந்து தனது பிரிவில் 4-வது இடத்தையும் ஒட்டுமொத்தமாக 11-வது இடத்தையும் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜோதிகா ஸ்ரீ தண்டி, பூவம்மா, வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கலந்து கொண்டது. ஹீட்ஸில் இந்திய மகளிர் அணி பந்தய தூரத்தை 3:32.51 விநாடிகளில் கடந்து 8-வது இடத்தையும், ஒட்டுமொத்தமாக 15-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments