ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் பும்ரா: ஜெய்ஸ்வால் 3-வது இடம்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 870 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். அதேவேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடத்தை இழந்து 869 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்திலும், குல்தீப் யாதவ் 16-வது இடத்திலும் தொடர்கின்றனர். பேட்டிங்கில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 792 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 899 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 829 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments