
கிறிஸ் கெயில், ட்ரெண்ட் போல்ட், மலிங்கா, சுனில் நரைன், குவிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், நார்க்கியா, தப்ரைஸ் ஷம்சி இன்ன பிற வீரர்கள் தேசிய கிரிக்கெட்டைத் துறந்து தனியார் டி20 லீகுகளில் கவனம் செலுத்தி வருவதால் அந்தந்த நாட்டுக்கு ஏற்படும் பேரிழப்புகளைப் பார்த்து வருகிறோம். இப்போது உலகமே அஞ்சும் அதிரடி மன்னன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி கடைசியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முற்றிலும் புதிய வீரர்களைக் கொண்ட அணியை அனுப்ப நேரிட்டதற்குக் காரணம் முன்னணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா டி20 லீகுகள் ஒப்பந்த நெருக்கடிகளைத் தாண்டி நாட்டுக்கு ஆட முடியாமல் போனதுதான். இதே தென் ஆப்பிரிக்கா டி20 லீக் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா தியாகம் செய்ய நேரிட்டதால் 2023 உலகக் கோப்பைத் தகுதியே தென் ஆப்பிரிக்காவுக்குச் சிக்கலானதையும் பார்த்தோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments