பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை தக்கவைத்தார் அல்கராஸ்: சின்னர் உடனான ஃபைனலில் த்ரில் வெற்றி!

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதி போட்டிகளில் ஒன்றாக அமைந்தது.

சுமார் 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் வரை இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 4-6, 6-7(7-4), 6-4, 7-6(7-3), 7-6(10-2) என்ற செட் கணக்கில் பட்டத்தை வென்றார். இதில் முதல் 2 செட்களை இழந்த நிலையில் அடுத்த மூன்று செட்களை வென்று அசத்தினார். இந்த இறுதிப் போட்டி பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதிப் போட்டியாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments