
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments