
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் சாக்கடை தூய்மைப்படுத்தப்படாமல், சாலைகளில் குப்பை அகற்றப்படாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. இதைத் தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் 'மாஸ் கிளீனிங்' செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 100 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் எங்குமே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் குப்பையை சரிவர அகற்றுவதில்லை. எங்கு பார்த்தாலும் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ebGlt2
0 Comments