https://ift.tt/2RP4DSf

கரோனா ஊரடங்கு உத்தரவால், மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கலைச் சின்னங்கள் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின்றி மாமல்லபுரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, கலைச்சின்ன வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முட்டுக்காடு பகுதியில் உள்ள படகு குழாம், சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QfNPTW

Post a Comment

0 Comments