https://ift.tt/2S3IjEF

கரோனா 2-வது அலையால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மக்களுக்கு வழங்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். ‘அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்’ என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதன்படி நேற்று காலை சென்னை எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சூளை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, கே.சி.கார்டன், திருவிக நகர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு உள்ளிட்டவற்றோடு கபசுரக் குடிநீர், தலா ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PheaAu

Post a Comment

0 Comments