https://ift.tt/3g0e4YR

காவலர்கள் அனைவருக்கும் கரோனாதடுப்பூசி போடப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நரியங்காடு காவலர் குடியிருப்பில் நேற்றுநடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசும்போது, “இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்ற ஆண்டு கரோனா பரவலைத் தடுப்பதற்கு அனைத்து நிபுணர்களும் 3 விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள். முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது. இந்த வருடம் நம்மிடையே கரோனா தடுப்பூசி உள்ளது. கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d9bKgg

Post a Comment

0 Comments