
கோவை அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 800 வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை நடவு செய்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிக்காரம்பாளையம்,சென்னி வீரம்பாளையம், வடவள்ளி, பெரியபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னிவீரம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u4hQ7G
0 Comments