
‘தென்னைய வச்சவன் தின்னுட்டு‍ச் சாவான்; பனைய வச்சவன் பார்த்துட்டு‍ சாவான்’ என்ற சொலவடை கிராமப் புறங்களில் சொல்லப் படுவதுண்டு. கன்றுகளாய் வைக்கப்பட்ட தென்னை நான்கைந்து ஆண்டுகளில் பலன் தந்து விடும். ஆனால், பனை மரமோ 20 ஆண்டுகளைக் கடந்தே பலன் தரும். ஆனாலும், அது தரும் பலன் சொல்லி மாளாது. நுனி முதல் அடி வரை அத்தனையும் பயனாகும் பனை மரம் ஒரு ‘கற்பகத் தரு’.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை.இன்று செங்கல் சூளைக்காக அழிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கிய வற்றில் பனைமரங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கதர் மற்றும் கிராமத்தொழில்வாரியம்அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் சுமார் 5 கோடி பனைமரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3szbD2o
0 Comments