
குமாரபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே கைதான 12 பேரில் இரண்டு பேர் அதிமுக பிரமுகர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குமாரபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தறித் தொழிலாளியின் 14 வயது மகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியா அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாயார் உட்பட 12 பேரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் குமாரபாளையம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OTqk2r
0 Comments