
கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்தான க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் சுபாஷினி வணங்காமுடி, விசாகம் வணங்காமுடி, மேலாளர் மருத்துவர் ஆர்தர் பால் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: லேசான, மிதமான கரோனா தொற்றுக்கு அபெக்ஸ் நிறுவனம் க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்து முதல்கட்டமாக ஆய்வகம் மற்றும் விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறந்த முடிவு வந்ததால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்கு கொடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. மருந்துகொடுக்கப்பட்ட 5 நாட்களில் 86 சதவீத தொற்றும், 10 நாட்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியது. இந்த மருந்துக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கழகம், ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RWd4Lx
0 Comments