
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக 2-வது நாளாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குவிந்தனர்.
தமிழகத்தில் சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல இடங்களில்தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், சிலதொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வளாகத்தில் 2-வது நாளாகநேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xbFi4U
0 Comments