
இந்திய கிரிக்கெட்டில் புதிதாக தோன்றியிருக்கும் நட்சத்திரம் அர்சான் நக்வஸ்வாலா. இங்கிலாந்தில் நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியின் ஸ்டாண்ட் பை வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நக்வஸ்வாலா. இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் ஆடாத இந்த நக்வஸ்வாலா யார் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 1997-ம் ஆண்டு பிறந்தவர் நக்வஸ்வாலா. இவர் பார்ஸி இனத்தை சேர்ந்தவர். இதன்மூலம் 45 ஆண்டுகள் கழித்து, அதாவது முன்னாள் விக்கெட் கீப்பரான பரூக் இன்ஜினீயருக்கு பிறகு, இந்திய அணிக்காக ஆடும் முதல் பார்ஸி இனத்தை சேர்ந்த வீரர் என்ற பெருமையை நக்வஸ்வாலா பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments