
சிவகாசியில் பள்ளி பேருந்தில் 5 ஆக்சிஜன் செலுத்தும் கருவி களை பொருத்தி அரசு மருத்துவ மனைக்கு தனியார் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.
சிவகாசியில் உள்ள ஹயக்ரிவாஸ் சர்வதேசப் பள்ளியும், சிவகாசி ஜேசிஐ டைனமிக்கும் இணைந்து பள்ளி பேருந்தை கரோனா வார்டாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன. இப்பேருந்தில் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள 5 ஆக்சிஜன் செலுத்தும் கருவி களைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஒரே நேரத்தில் 10 நோயாளிகளுக்கு ஆக்சி ஜன் அளிக்க முடியும். மேலும், காற்றோட்டத்துக்காக பேருந்தில் மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tR1PBb
0 Comments