https://ift.tt/2RekKsw

ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தென்பாகம்உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீஸார் அண்ணா நகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரை கைது செய்து, 1,872 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து, 885 மதுபாட்டில்களை கோவில்பட்டி கிழக்கு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், வைகுண்டம், கோவில்பட்டி மேற்கு, எட்டயபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவுமற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு, 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QcZvXt

Post a Comment

0 Comments