
மாநகராட்சி சார்பில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் இதுவரை 29 ஆயிரம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள, லேசான அறிகுறி உள்ள கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசோதித்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தினமும் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் செறிவு உள்ளிட்டவற்றை பரிசோதித்து வருகின்றனர். வேறுஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா எனவும் கேட்டு, அதற்கு ஏற்ற சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2REkO54
0 Comments