
கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர், மருத்துவக் காப்பீடு எடுக்க மதுரை மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் வந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. அவர்களை வரவழைத்த காப்பீட்டுத் திட்ட ஊழியர்களை ஆட்சியர் பி.மது சூதன் எச்சரித்தார்.
திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் ராஜபிரபு. சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முதல்வர் அறிவித்தபடி தனக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yuqdMG
0 Comments