https://ift.tt/3oqXLXh

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகி வலுப்பெற்ற ‘டவ் தே’ புயல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம், கொடுமுடியாறு அணை ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. சேர்வலாறில் 33 மி.மீ., களக்காட்டில் 28.40, நாங்குநேரியில் 16.50, ராதாபுரத்தில் 15, அம்பாசமுத்திரத்தில் 11, மணிமுத்தாறில் 9.20, மூலக்கரைப்பட்டியில் 8, சேரன்மகாதேவியில் 3.60, நம்பியாறு அணையில் 3, பாளையங்கோட்டையில் 2, திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fkj6Oc

Post a Comment

0 Comments