
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி.சம்பந்தம் (62) நேற்று செங்கல்பட்டில் காலமானார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான‌ விசாரணைக் குழுவில் 1997 டிசம்பர் 3-ம் தேதி ஜி.சம்பந்தம் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவ்வழக்குக்காக அவர் இரவு பகலாக பாடுபட்டார். மேலும், இவ்வழக்கு 2004-ல்பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது, விசாரணையைக் கண்காணிக்க ஜி.சம்பந்தம் பெங்களூருவுக்கு அனுப்ப‌ப்பட்டார். அவர் சிறப்பாக பணியாற்றியதால் 2007-ல் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான விருது பெற்றார். 2009-ல் அவருக்கு துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2016-ல் அவர் ஓய்வுபெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x2Yi4M
0 Comments