
ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த நபரிடமிருந்து கணக்கில் வராத 28 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முழு ஊரடங்கு காரணமாக, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து, ரயில் நிலையங்களில் சட்ட விரோதமாக, பிற மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3invlwD
0 Comments