ஜோதிடம்

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தானது. சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. நிதானமாக விளையாடிய பாகிஸ்தான் அணி போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் (74 ஓவர்), 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 22, பாகீம் அஷ்ரப் 23 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.



from Dinakaran.com |23 Aug 2021 https://ift.tt/2We99Mn
via IFTTT

Post a Comment

0 Comments