ஜோதிடம்

* மகளிர் 100 பந்து கிரிக்கெட் தொடரின் பைனலில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 48 ரன் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் மகளிர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஓவல் இன்வின்சிபிள்ஸ் 100 பந்தில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்; சதர்ன் பிரேவ் 98 பந்தில் 73 ரன்னுக்கு ஆல் அவுட். * ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பிரசவத்தின்போது மனைவியுடன் இருப்பதற்காக விடுப்பில் செல்வதால், மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.* டோக்கியோவில் நாளை தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா டேபிள் டென்னிஸ், பவர்லிப்டிங், டேக்வாண்டோவில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.* பாரா ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 5 வீரர், வீராங்கனைகள் மற்றும் 6 நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் 54 பேர் அடங்கிய பிரமாண்ட இந்திய குழு பதக்க வேட்டையில் இறங்குகிறது.* முழங்கால் மூட்டு காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் தொடக்க வீரர் தமிம் இக்பால், விரைவில் முழுமையாக குணமடைந்து ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாடத் தயாராகி விடுவார் என வங்கதேச கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.* தேசிய கிரிக்கெட் அகடமியில் புதிய பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ள பிசிசிஐ, இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால கெடுவை ஆக. 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.* இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் (ஸ்பெயின்), 2021 சீசனில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் உள்பட எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |23 Aug 2021 https://ift.tt/3z8OMyt
via IFTTT

Post a Comment

0 Comments