கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் நகரில் நடந்த ‘டென்னிஸ் இன் தி லேண்ட்’ ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ருமெனியாவின் இரினா பெகுவுடன் (31 வயது, 63வது ரேங்க்) மோதிய கோன்டவெய்ட் (25 வயது, 28வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் பெகுவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். சானியா ஜோடி ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா - கிறிஸ்டினா மிக்கேல் (அமெரிக்கா) ஜோடி 5-7, 3-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஷுகோ அவோயமா - என ஷிபஹரா ஜோடியிடம் போராடி தோற்றது.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/3gIYH6F
via IFTTT
0 Comments