ஜோதிடம்

பாரா ஒலிம்பிக் ஆண்கள் வட்டு எறிதல் எப்-52 பிரிவில் இந்திய வீரர் வினோத் குமார் (41 வயது), புதிய ஆசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் 19.91 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3வது இடம் பிடித்தார். இந்த போட்டியில் போலந்து வீரர் கோசெவிக்ஸ் (20.02 மீ.) தங்கப் பதக்கமும், குரோஷியாவின் வெளிமிர் சாண்டோர் (19.98 மீ.) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். பிஎஸ்எப் வீரராக சேர்ந்து லே மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில் கால்களில் பலத்த காயமடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த வினோத் குமார் பாரா ஒலிம்பிக்சில் பங்கேற்று சாதித்திருக்கிறார். இத்தொடரில் இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 பதக்கங்கள் கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/3mN0fAv
via IFTTT

Post a Comment

0 Comments