சென்னை: ஐஎஸ்எல் தொடரில் களமிறங்கும் சென்னையின் எப்சி கால்பந்து அணியில், புதிதாக போலந்து வீரர் லூகாஸ் கிக்கிவிக்ஸ் (33) இணைந்துள்ளார். முன்கள ஆட்டக்காரரான லூகாஸ், ஐரோப்பிய நாட்டு கிளப்களுக்காக மட்டுமின்றி ஏற்கனவே கஜகிஸ்தான், சவுதி அரேபியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் கால்பந்து கிளப்களுக்காகவும் விளையாடி உள்ளார். கடைசியாக பஹ்ரைனில் உள்ள ‘ஈஸ்ட் ரிப்பா’ அணியில் விளையாடினார். ஐரோப்பா லீக், சாம்பியன்ஸ் லீக் தொடர்களிலும் விளையாடி உள்ள லூகாஸ் 2012ல் ஸலஸ்க் வார்க்ளா அணி போலந்து சூப்பர் கப் வெல்ல காரணமாக இ ருந்தவர். பல்வேறு கால்பந்து கிளப் அணிகளுக்காக 293 ஆட்டங்களில் விளையாடி 75 கோல் அடித்துள்ளார். சென்னை அணிக்காக ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |22 Aug 2021 https://ift.tt/3D3Y4OJ
via IFTTT
0 Comments