ஜோதிடம்

ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா (27 வயது) வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். 3வது இடத்துக்கான மோதலில் நேற்று கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோவ் தவுலத்துடன் மோதிய பஜ்ரங் அபாரமாக செயல்பட்டு 8-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 2வது பதக்கமாக பஜ்ரங் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டை எண்ணிக்கை அதிகரிக்க உதவினார். இந்த பதக்கத்துடன் இந்தியா ஒரு ஒலிம்பிக் போட்டியில் வென்ற அதிகபட்ச பதக்க சாதனையை (6) சமன் செய்தது. முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக்சில் இந்தியா 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.



from Dinakaran.com |08 Aug 2021 https://ift.tt/3fE49re
via IFTTT

Post a Comment

0 Comments